Monday, November 3, 2008

grand prix


பொதுவாக தமிழ் செய்தி தாள்களில் தமிழின் தரம் அவ்வளவாக இருக்காது. இத்தனை ஆண்டுகளாகியும் அமெரிக்க அதிபர், இலங்கை அதிபர் என்று தான் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். தினமலம் போன்றவற்றில், greenfield airport-ஐ பசுமை தளத்துடன் கூடிய விமான நிலையம் என்று எழுதுகிறார்கள்.
சரி அப்படி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? greenfield என்றால் புத்தம் புதிய என்று அர்த்தம்.

சமீபத்தில் தினமலம் விளையாட்டு பகுதியில் grand prix-ஐ கிராண்ட் பிரிக்ஸ் என்று எழுதியிருக்கிறார்கள். இதை படித்ததும் எனக்கு எதால் சிரிப்பது என்று புரியவில்லை.கிராண்ட் பிரிக்ஸ் என்றால் சமஸ்கிரிதத்தில் மஹாலிங்கம் என்று மொழி பெயர்க்கலாம். சென்னை தமிழில் சொல்வதானால், பெரிய பூ-.
grand prix is of french origin and it is pronounced as "grahn pree" which means "great prize".

No comments: