Monday, November 10, 2008

தின மலத்தின் தமிழ் தொண்டு


தினமலம் தமிழ் இனத்திற்கு எதிரான செய்திகளை வாசகர் கடிதம் என்ற பெயரில் வெளியிட்டு அற்ப மகிழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த கடிதத்தில் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு, இந்திய இராணுவம் இனப்படுகொலை செய்கிறது, அதனால் நிதி திரட்டுகிறோம் என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று ஒருவர் கேட்கிறார். முதலில் காஷ்மீர் முழுவதுமாக நம்மிடம் இல்லை. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை பாகிஸ்தான் கவனித்து கொண்டு தான் இருக்கிறது. ஏதாவது காரணம் கிடைத்தால் குரல் எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இரண்டாவதாக இந்திய இராணுவம் காஷ்மீர் மீது போர் விமானங்களை அனுப்பி குண்டு வீசவில்லை. மூன்றாவதாக உணவு பொருட்களை தடுத்து நிறுத்தி காஷ்மீர் மக்களை பட்டினி போடவில்லை.
இந்த வேற்றுமைகள் எல்லாம் இருக்கட்டும். ஆனால் இந்த தயிர் வடை லாஜிக், சர்வ தேச விவகாரத்தில் எப்படி செல்லுபடி ஆகும். அதாவது இந்தியா, இலங்கை விவாகரத்தில் தலை இடவில்லை என்றால் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தலை இடாதா ? ஒரு நாடு என்பது மக்களால் ஆனது, பெரும் அளவிலான மக்கள் ஒரு பிரச்சினையில் தலை இடுமாறு கூறினால் அதை அரசாங்கம் செய்ய வேண்டிய கடமை உள்ளது. தினமலதிற்கு இதெல்லாம் தெரியும், இருந்தாலும் மக்களை முட்டாளாக்க இது போன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.

No comments: