Monday, June 30, 2008

சாருவுக்கு ஒரு கடிதம்

இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியை internet -ல் பார்த்தேன். அதில் நீங்கள் உளறிக் கொட்டியதையும் பார்த்தேன். விபச்சாரத்தை சட்டப்படி அனுமதிக்க வேண்டும் என்பது உங்கள் கருத்து. அப்படி அனுமதித்தால் என்ன ஆகும் என்று தெரியுமா ?பெண்கள் கல்லூரி வாசலிலே விபசாரி ஆகும் படி அழைப்புகள் விடுக்கப்படும்.நீங்கள் சொல்லலாம், பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்லலாமே என்று. விபசார தொழில் செய்பவர்கள் மற்ற தொழில் செய்பவர் போலல்ல.வேண்டாம் என்றால் விட்டு விட்டு போவதற்கு.முடியாது என்றால் முகத்தில் அமிலத்தை ஊற்றுவார்கள்.போலீஸ்-இல் சொன்னால், இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது! போய் வா என்பார்கள். அதற்கு இன்னொரு சட்டம் எழுத வேண்டும், அதாவது விபச்சாரம் செய்வது அனுமதிக்க பட்டுள்ளது ஆனால் ஆள் பிடிப்பது தடை செயயப்பட்டுள்ளது என்று. இவ்வளவு செயதாலும் போலீஸ் யார் பக்கம் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். எதோ சில ஆயிரம் பேர் கஷ்டபடுகிறார்களே என்று சட்டத்தை மாற்றினால் கோடிக்கணக்கான பெண்கள் பாதிக்கபடுவர்.எல்லோரும் உங்கள் மனைவி மாதிரி எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள மட்டார்கள். உங்கள் மனைவி திட்டியவர்களையும் அடித்தவர்களையும் அவமானபடித்தியவர்களையும் மன்னித்து விடுவார் ஆனால் எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள், இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கவும் கூடாது.இப்படிக்கு பொந்துமணி

Bunch of Jokers Party

அண்மையில் BJP ( Bunch of Jokers Party) வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.கூட்டம் கூடி விவாதித்து தலைவர்கள் 6 பேரை தேர்வு செய்து விட்டார்கள்.