Saturday, May 7, 2011

தினமலத்தின் சுவாரசியமான நிகழ்ச்சி

தினமலத்தில் பொதுவாக இது போன்ற அநாகரீகமான கருத்துகளை பலமுறை பார்த்திருக்கிறேன்.
கீழ்கண்ட "கதையை" தினமலம் பலமுறை மறு பதிப்பு செய்துள்ளது.





அந்துமணி பா.கே.ப.
பதிவு செய்த நாள் : மே 08,2011,00:00 IST
கருத்தை பதிவு செய்ய
கோவையிலிருந்து வாசகர், ஒருவர் சுவையான நிகழ்ச்சி ஒன்றை எழுதி இருந்தார். இதோ அவரது கடிதம்...
ஒரு நிகழ்ச்சி... நடந்து பல வருடங்கள் ஆகின்றன. இருந்தாலும், சுவாரசியம் குறையாத நிகழ்ச்சி என்பதால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அப்போது நான் அரசு ஆலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆலையில் பணியாற்றும் அலுவலர், பணியாளர், பொறியாளர், தொழிலாளர்களுக்கு ஆலையே, வீடு வசதி செய்து கொடுத்துஇருந்தது. வீடுகளின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில், மரம், செடி நட்டு பலனை குடியிருப்போர் அனுபவித்துக் கொள்வர்; இது, நடைமுறையில் இருந்த வழக்கம்.
இந்நிலையில், முதன்மை நிலை அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் பின்புறம் நிறைய இடம் இருக்கும்; அதில், நிறைய மாமரங்கள் இருந்தன.
"விளையும் பழங்களை அதிகாரிகள் விற்கின்றனர்!' என்ற செய்தி மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் உள்ள முதன்மை நிர்வாகிக்கு சென்றது.
அவர், "அதிகாரிகள் வீட்டில் விளையும் மாம்பழங்களை ஏலத்தில் விட்டு, கம்பெனிக்கு பணத்தை கட்டி விட வேண்டும்!' என்று, ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
இந்தச் செய்தி அதிகாரிகளை எட்டிய போது, அவர்கள் இதை ஒரு கவுரவ பிரச்னையாக எடுத்துக் கொண்டனர். ஒரு சிறிய விஷயத்தை பெரிதுபடுத்தி, தங்களை, டி.ஆர்.ஓ., அவமானப்படுத்தி விட்டதாக நினைத்தனர். அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பணியாளர் நல அதிகாரியை முற்றுகையிட்டு வாதாடினர்.
ஒரு வருடம் தாங்கள் கஷ்டப்பட்டு தண்ணீர் விட்டு வளர்த்த மரங்களை, பலன் வரும் போது நிர்வாகம் கையகப்படுத்தி, பழங்களை ஏலம் விடுவது சரியல்ல என்றும், இதே நிலை நீடித்தால், இனி, மரங்களை கவனிக்க மாட்டோம்; அடுத்த வருடம் பழமே அதிகம் இராது என்றெல்லாம் கூறினர்.
அரசியல் செல்வாக்கு உள்ளவர் பணியாளர் நல அதிகாரி; மதிநுட்பம் நிறைந்தவர். அவர் இரண்டாம் நிலை அதிகாரி என்றாலும், முதல் நிலை அதிகாரிகளுக்கெல்லாம் அதிகாரி போல் இருந்தவர். அவர், "இது டி.ஆர்.ஓ., ஆர்டர். நான் ஒன்றும் செய்ய இயலாது. இந்த வருடம் விட்டு விடுங்கள். அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்!' என்று பொறுமையாக எடுத்துச் சொன்னார். அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதாக இல்லை; மீண்டும், மீண்டும் வாதிட்டனர்.
கோபமடைந்த அதிகாரி, "ஆமாய்யா... ஒரு வருஷம் கஷ்டப்பட்டு வளத்தீங்க... பலனை அனுபவிக்கணும்; நீங்க சொல்றது நியாயம்தான். ஆனா, நீங்க, 20 வருஷம் கஷ்டப்பட்டு பொண்ணை வளக்கறீங்க... "நாந்தான் கஷ்டப்பட்டு வளர்த்தேன்; அதனால, நான் தான் அவளை கட்டிக்குவேன்...'ன்னு உரிமை கொண்டாட முடியுமா? தளதளன்னு வளர்த்து, எவனோ அனுபவிக்கத்தான்யா கொடுக்கறீங்க. 20 வருஷம் வளர்த்த பொண்ணு மேல கொண்டாட முடியாத உரிமையை, 10 மாசம் தண்ணீர் விட்டு வளத்த மாமரத்துல கேக்கறீங்களாக்கும். போங்கய்யா, வேலையை பாத்துக்கிட்டு!' என்று ஒரே போடாகப் போட்டார்.
என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்துப் போயினர் அதிகாரிகள். பிரச்னை முடிவுக்கு வந்தது. அந்த வருடம் மாம்பழ வருமானம் ஆலைக்கு கட்டப்பட்டு விட்டது.
***

No comments: